பணம் சம்பாதிக்க அல்ல... சாதிக்கவே ஓவியனானேன்!- செல்வம்


மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஓவியர் செல்வம். தொடர்ந்து ஓவியத்தில் புதுப்புது முயற்சிகளைச் செய்து சாதனை படைப்பது இவருடைய லட்சியம். தலைகீழாக மரத்தில் தொங்கியபடி வரைவது, வாயால் வரைவது, வாழை இலையில் வரைவது என பல்வேறு முயற்சிகள். இவற்றில் சில புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பெற்றுள்ளன. அவரிடம் பேசியதிலிருந்து...

ஓவியத்தில் எப்போது ஆர்வம் வந்தது?

ஐந்தாம் வகுப்பிலிருந்தே வரைய ஆரம்பித்துவிட்டேன். வகுப்பில் படம் ஒன்று வரைந்து வரச் சொன்னார்கள். என்னுடைய அம்மாதான் எனக்கு வரையக் கற்றுக்கொடுத்தார்கள். அப்போது வந்தது ஓவிய ஆர்வம். அதன் பிறகு தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் எதையாவது வரைந்துகொண்டே இருப்பேன். ஓவியத்தில் ஏதோ ஒன்று சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் எனக்குள் இருந்தது. வாழை இலையில் காமராஜர், லட்டுவில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் எனக் கிடைக்கிற பொருள்களில்லாம் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறேன்.

ஓவியர்களில் நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்கள். எப்படி?

x