“உள்ளுணர்வு சொல்லாமல் கலை முழுமையடையாது” - அஜய் தேஷ்பண்டே 


தக்‌ஷிண்சித்ராவில் நடந்த ஓவியக் கண்காட்சியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓவியர் அஜய் தேஷ்பண்டேயும் கலந்துகொண்டார். 1990-லிருந்து காட்சிப்படுத்திவரும் இவருடைய ஓவியங்களுக்கு ஓவியப் பிரியர்களிடையே நல்ல வரவேற்பு உண்டு. இவருடைய ஓவியங்களில் பெரும்பாலும் விளிம்புநிலை மனிதர்கள், நாய்கள், ஆடுகள், பழங்கால பொருள்கள், கிராமப்புற கலைஞர்கள் இடம்பெறுவார்கள். ஓவியக் கலையில் பல விருதுகளையும் பெற்றுள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து...

ஓவியம் வரையும் ஆர்வம் எப்படி வந்தது?

அதுதான் எனக்கே புரியவில்லை. எப்போது நான் வரைய ஆரம்பித்தேன் என்பதைக்கூட என்னால் நினைவுகூர முடியவில்லை. நான் தீவிரமாக ஓவியம் வரைய ஆரம்பித்தது என்றால் அது 20 வயதுக்கு மேல்தான். படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தேன். மேல்படிப்பு படிக்கவும் முடியாத பொருளாதார சூழல். அப்போதுதான் எனக்கு ஓவியம் கைகொடுத்தது. எனக்கு ஊர் சுற்றுவது மிகவும் பிடிக்கும். சாதாரணமாக எல்லோரும் கடந்துபோகும் விஷயங்களைக்கூட உன்னிப்பாக கவனிப்பேன். தெருக்களில் அமர்ந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வெறித்துப் பார்த்துகொண்டிருப்பேன். அப்படி எனக்குள் வந்தவர்கள்தான் என் ஓவியங்களில் நிறைந்திருக்கிறார்கள்.

இசைக் கலைஞர்களை உங்கள் ஓவியங்களில் அதிகம் பார்க்க முடிகிறதே?

x