கற்பனையை  நிஜமாக்குவதுதான் கலை - சர்ளா சந்திரா


சென்னை அடையாறு ஃபோரம் ஆர்ட் கேலரியில் நடக்கும் ஓவியக் கண்காட்சியில் சர்ளா சந்திராவின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. இவருக்கு வயது 74. ஆனால், இவருடைய ஓவியங்களில் வயதின் தாக்கம் துளியும் இல்லை. ஒவ்வொரு ஓவியத்திலும் இவருடைய வண்ணக் கலவைகள் அனிமேஷன் படங்களில் இருக்கும் பேன்டசி தன்மையைக் கொண்டுவந்துவிடுகின்றன. அவரிடம் பேசியதிலிருந்து... 

உங்களுடைய ஓவியங்களுக்கு உரமாக இருப்பது எது?  

என்னுடைய தேடல்தான். சாதாரண மனித பார்வைக்கு அப்பாற்பட்ட அண்டத்தின் தேடுதல். எனக்கு சிறு வயதிலிருந்தே கலைத்திறமை இருப்பதாக உணர்ந்திருக்கிறேன். சிறுவயதில் வானத்தைப் பார்க்கும்போதெல்லாம் அதையும் தாண்டி இருக்கிற நட்சத்திரங்கள் நிறைந்த அண்டவெளியைப் பார்ப்பதுபோலவே கற்பனை செய்திருக்கிறேன். என் கற்பனைத் தேடலை நிஜமாக்குவதுதான் என் கலை. அதில் என்னுடைய அனுபவம், கலாச்சாரம், வாழ்க்கை என எல்லாம் கலந்தே வெளிப்படுகிறது. எனக்கு கலாச்சாரம், ஆன்மிகத்தின் மீது அதிக ஈடுபாடு உண்டு. இந்து, புத்தம், சூஃபி ஆகியவற்றில் எனக்கிருக்கும் அனுபவத்தில் பார்வையில் பெருமளவிலான ஓவியங்களை வரைந்திருக்கிறேன்.  

உங்கள் ஓவியங்களில் தனித்துவமாக நீங்கள் கருதுவது?  

x