கன்னியாகுமரி
பேருந்தில் நடத்துநரும் இளைஞரும்...
“யாராவது டிக்கெட் எடுக்காமல் இருந்தாலோ... டிக்கெட்டை தொலைச்சிருந்தாலோ... தயவுசெய்து ஆறு ருபாய் டிக்கெட் ஒண்ணு வாங்கிக்கோங்க, பஸ் ஸ்டாண்டுல செக்கர் நிற்பார்...”
“அண்ணே... நமக்கு, ஒரு ஆறு ருபாய் டிக்கெட் கொடுங்க”
“என்ன, டிக்கெட்டை தொலைச்சிட்டியா?”
“இல்லண்ணே... டிக்கெட்டே வாங்கலை.”
“யோவ்... பஸ்சுல ஏறிட்டு, ஃபிராடு வேலை பார்க்கிறியா? செக்கர் பிடிச்சா அபராதம் எவ்வளவுன்னு தெரியும்ல...”
“தெரியும்... நீங்கதான் ஆறு ரூபாய் டிக்கெட் வாங்கச் சொல்றீங்களே... அப்புறம் ஏன் செக்கர் பிடிக்கப் போறார்? உங்க ஐடியா சூப்பர்ண்ணே. அப்படியே வாட்ஸ் - அப்பில் போடுறேன்.”
(திட்டியபடியே விசில் கெடுக்கிறார் நடத்துநர்)
- பனங்கொட்டான் விளை, மகேஷ் அப்பாசுவாமி
ராயப்பேட்டை
டீக்கடைக்காரரும் பால் வண்டி ஓட்டுபவரும்...
டீக்கடைக்காரர்: ஏம்பா! அரசு பஸ்ஸை விட உன் ஆட்டோ அரத பழசா இருந்தாலும் பிரேக் அடிச்ச இடத்துல நிக்குதே?
பால் ஆட்டோக்காரர்: அட நீங்க வேற! உங்க கடை முன்னால நிப்பாட்டுறதுக்கு 100 மீட்டர் முன்னாலேயே பிரேக் போடணும்!
டீக்கடைக்காரர்: வெள்ளைக்காரன்தான் பொய் சொல்ல மாட்டான்னு நினைச்சேன், பால்வண்டிக்காரரும் பொய் சொல்ல மாட்டாருன்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்!
- சென்னை, எ.எம். முகமது ரிஸ்வான்
சித்தோடு
டீக்கடையில் பெரியவர் ஒருவர் இளைஞரிடம்...
“தம்பி! பேப்பர் ராசி பலன்ல தனுசு ராசிக்கு என்ன போட்டிருக்குன்னு பாருப்பா...”
“பயணம்னு போட்டிருக்கு...”
“பைக்ல போறதா, பஸ்ல போறதா..?”
“ம்... அதெல்லாம் போடலை. நீங்க நடந்து போறது நல்லது... உங்களுக்கு குசும்புதான்...”
“சரி... சரி... கோவிச்சுக்காதப்பா!”
- சித்தோடு, இரா. கமலக்கண்ணன்
வேம்பார்
பேருந்து நிலையத்தில் நண்பர்கள் இருவர்...
“டேய் மாப்ளே... வெளிநாட்டுல இருந்து
வந்திருக்கே... சரக்கு வாங்கிட்டு வந்தியா..?
(நண்பர் கடுப்புடன்..) “ம்..நாலு பாட்டில்
பெட்ரோல் வாங்கிட்டு வந்திருக்கிறேன்.குடிக்
கிறீயா? நானே... ஆபீஸ்ல வேலைன்னு கூப்பிட்டுப் போய் ஒட்டகம் மேய்க்க விட்டுட்
டாங்கன்னு கடுப்புல ஓடி வந்திருக்கிறேன். நீ வேற... போய் வேற எவனாவது சிக்கு
றானான்னு பாரு!”
(நண்பர் தலையில் அடித்துக்கொண்டே இடத்தைக் காலி செய்கிறார்.)
- வேம்பார், மு.க.இப்ராஹிம்