சென்னை அடையாறில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில் அக்டோபர் 8 முதல் 23 வரை பலதரப்பட்ட கலைஞர்களின் ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பார்த்ததுமே கவரும் வகையில் வித்தியாசம் காட்டுகின்றன சந்திரா மோர்கொண்டாவின் ஓவியங்கள். அவருடைய ஓவியங்களில் மரம், செடி, கொடிகளும் தெய்வங்களும்தான் நிறைந்து இருந்தன. அவரிடம் பேசியதிலிருந்து...
ஓவியம் வரையும் ஆர்வம் எப்படி வந்தது?
நான் அடிப்படையில் நெசவுக் குடும்பத்தைச் சேர்ந்தவன். சிறுவயதில் என் பெற்றோர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது அவற்றில் நான் பார்த்து வியந்ததெல்லாம் வண்ணங்களை மட்டும்தான். வண்ணங்களை அவர்கள் பயன்படுத்திய விதம் எனக்குள் ஆர்வத்தைத் தூண்டியது. நான் நெசவுத்தொழிலில் ஆர்வம் காட்டாமல் ஓவியம் வரைய ஆரம்பித்தேன். நெசவில் சிவப்பு, மஞ்சள், நீலம் போன்றவைதான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். இப்போதும் ஏனோ தெரியவில்லை என்னுடைய ஓவியங்களில் இந்த வண்ணங்கள்தான் பெரும்பாலும் இடம்பெறுகின்றன.
உங்களது ஓவியங்களில் இயற்கையும் கடவுளும் மட்டுமே இருக்கிறதே?