புதுச்சேரி ஆர்ட் அகாடமி, கடந்த மாதம் சென்னை லலித் கலா அகாடமியில் தேசிய அளவிலான ஓவியக் கண்காட்சி நடத்தியது. இதில் 70 ஓவியர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் ஒரு மயில் ஓவியமும், தமிழ்க் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பின்னணியில் ஒரு பெண் குழந்தை ஓவியமும் அனைவரையும் கவர்ந்தது. அந்த ஓவியங்களை வரைந்த வளரும் ஒவியக் கலைஞர் அருணிடம் பேசியதிலிருந்து...
கண்காட்சியில் பெரும்பாலானவை அப்ஸ்ட்ராக் ஓவியங்களாக இருக்கையில், உங்களது மட்டும் ரியலிஸ்ட்டிக் ஓவியங்களாகவே இருக்க என்ன காரணம்?
நம்முடைய தமிழ்க் கலாச்சாரத்தைப் பதிவு செய்யும் ஓவியங்களை எனக்கான கான்செப்ட்டாக எடுத்துக்கொண்டிருக்கிறேன். நம்முடைய கலாச்சார உடைகள், பொருள்கள், விளையாட்டுகள் என எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை தொகுக்கும் வேலைகளைப் பலரும் பல விதத்தில் செய்கிறார்கள். நான் ஓவியங்களாகத் தொகுக்க நினைக்கிறேன்.
இதற்காக நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்குமே?