விருது விருது... வருது வருது..!


‘சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்' விருது பெற்றிருக்கிறார் நமது தேசத் தந்தை பிரதமர் மோடி அவர்கள். என்னது தேசத்தந்தையா? என்று அதிர்ச்சியடைபவர்களின் கனிவான கவனத்துக்கு... எடப்பாடி பழனிசாமியை ‘பிடல் காஸ்ட்ரோ’ என்றும், குனிந்து குனிந்தே கூன்விழுந்த ஓபிஎஸ்-ஐ ‘சேகுவேரா’ என்றும் அமைச்சர் ஜெயக்குமார் அழைக்கிறபோது, மோடியை ‘மகாத்மா’ என்று சொன்னால் என்ன குறைந்துவிடப் போகிறது?

மாஸ்க் அணியாமல் வெளியே வந்தா மூச்சு முட்டுகிற அளவுக்கு சுற்றுச்சூழல் கெட்டுப்போன ஒரு தலைநகர்ல இருந்துக்கிட்டு, “காட்டை அழி ரோட்டைப் போடு”, “மலையை அழி சுரங்கத்தைத் தோண்டு”, “நெல் வயல்களை எல்லாம் (எண்)நெய் வயல்களாக்கு” என்று உத்வேகப்படுத்தும் பிரதமரின் சுற்றுச்சூழல் அக்கறையைப் பாராட்டி சர்வதேச விருதை வழங்கியிருக்கிறது ஐக்கிய நாடுகள் சபை. இதே விதிகளைப் பின்பற்றி நல்லவங்க நாலு பேருக்கு விருது வழங்கினா என்ன என்று நமக்குள் தோன்றிய விபரீத எண்ணத்தின் வெளிப்பாடு இது.

மத நல்லிணக்க விருது:

புத்தி, செயல், எண்ணம் என்று எல்லாவற்றிலும் மத நல்லிணக்கம் பற்றியே சிந்திப்பவர். தன் அட்மின்களைக் கொண்டும் மத நல்லிணக்க கருத்துகளைப் பதிவிடுபவர். காவல்துறையைப் பற்றியும், மறைந்த ‘பெரியார்’களைப் பற்றியும் நயத்தகு நாகரிக கருத்துகளை(!) வெளியிடுபவர். அட்மின் புகழ் எச்.ராஜா ‘மத நல்லிணக்க விருதைப்’ பெறுகிறார்.

x