தனிமை விரும்பிக்குக் கலைதான் துணை- ககேஸ்வர் ரவுத் 


மிக இளம் வயதிலேயே அதிக கவனத்தை ஈர்க்கிறார் ஒடிசாவைச் சேர்ந்த செராமிக் கலைஞர் ககேஸ்வர் ரவுத். களிமண், செம்மண் போன்றவற்றிலிருந்து கலைப்பொருட்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர். இவருடைய சிறப்பு, களிமண்ணில் மிக சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்குவதுதான். 26 வயதாகும் இவர் படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகளில் பல கண்காட்சிகளை நடத்தியிருக்கிறார். சில விருதுகளையும் வாங்கியிருக்கிறார். தக்‌ஷிண்சித்ராவில் சமீபத்தில் நடந்த கலைக் கண்காட்சியில் அவரிடம் பேசியதிலிருந்து... 

செராமிக் கலையின் மீது எப்படி ஆர்வம் வந்தது? 

சிறுவயதிலேயே மண்ணைக் குழைத்து பொம்மைகள் உருவாக்கி விளையாடுவேன். சக வயதுடையவர்களெல்லாம் பல்வேறு விளையாட்டு களில் கவனம் செலுத்த, நான் மட்டும் அப்போதிருந்தே தனிமையில் வேறு எதையோ செய்துகொண்டிருப்பேன். தனிமை விரும்பியாக இருந்த எனக்கு இந்த மண் தான் எல்லாமுமாக இருந்தது. கலையின் மீது இருந்த அந்த ஆர்வம் வாழ்க்கையாகவே மாறிவிட்டது. 

மண்ணில் கலைப் பொருள்கள் செய்பவர்களுக்கு மத்தியில் நீங்கள் வித்தியாசமாக இது போன்ற சிக்கலான வடிவங்களை உருவாக்கு கிறீர்களே?  

x