திருச்சி
துணிக்கடை ஒன்றில் கணவனும் மனைவியும்...
“ஏங்க... இந்தப் புடவை எப்டி இருக்கு?”
“ரொம்ப நீளமா இருக்கு...”
“நீளமா இருந்தாதான் அது புடவை. குட்டையா
இருந்தா தாவணி. உங்களுக்கு வெவரம் பத்தாதுனு உங்க அம்மா சொன்னது சரியாத்தான் இருக்கு..!”
(கணவர் அவசரப்பட்டு உஷாரில்லாமல்...)
“யாருக்கு... எனக்கு வெவரம் பத்தாதா..?”
(சட்டென்று சொல்ல வந்ததை நிறுத்திக் கொள்ள புடவை டிசைன் காட்டுபவர் ‘டைம்
பாஸாக’ சிரிக்கிறார்.)
- திருச்சி, சிவம்
பவானி
அம்மாபேட்டை அரசு வங்கி ஒன்றில்...
“பாட்டி... கைரேகை வெப்பியா இல்லே கையெழுத்துப் போடுவியா..?”
“ரேகைதான் வெப்பேன்..!”
“சரி, அந்த ஆட்டோகிராஃப்ப இதுல வந்து போடு..?!”
(வங்கியில் சிரிப்பு சில்லறை தெறிக்கிறது...)
- இடைப்பாடி, ஜெ.மாணிக்கவாசகம்