பேசிக்கிட்டாங்க...


நாகர்கோவில்

டீக்கடையில் கஸ்டமர் இருவர்...
“மாப்ளே! நேற்று நம்ம ஊர்ல ரிலையன்ஸ் மால் தொறந்துட்டாங்களே... ஒருகிலோ சீனி 38 ரூபா. ஒருகிலோ மைதா 35 ரூபா. இவ்வளவு நாளும் நம்ம ஊர்க்காரனெல்லாம் நம்மள ஏமாத்திட்டு இருந்திருக்கான் பாத்துக்கோ!”
“அப்படியா! அப்ப ரிலையன்ஸ் பெட்ரோல் பங்குல ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கு தரச் சொல்லேன் பாப்போம். ஏம்ளே இப்படியெல்லாம் வெவரம் இல்லாம பேசுதீங்க? உள்ளூர்காரன வாழவே விட மாட்டீங்களா... 50 ரூபா லாபத்துக்கு 100 ரூபா செலவழிச்சு ஆட்டோல போறவன்தான் நிறைய பேரு நம்ம ஊர்ல இருக்கான்.”
- நாகர்கோவில், சாதிக் குல்

வேம்பார்

வேம்பார் - விளாத்திகுளம் அரசுப் பேருந்தில் பயணியும் நடத்துனரும்...
“சார் ஸ்கூல் ஸ்டாப் எறங்கணும்...”
“வாங்க... எறங்குங்க...”
(ஒரு பெரும் கூட்டமே இறங்குவதைப் பார்த்துவிட்டு இன்னொரு
பயணி நடத்துநரிடம்)
“சார் இங்க ஸ்கூலுக்கு பக்கத்துல வீடுங்க, வேலை செய்யுற இடம்னு எதுவுமே இல்லையே... இவ்வளவு பேர் இந்த ஸ்டாப்புல இறங்குறாங்களே ஏன்?”
“ஸ்கூல் நடத்த அரசாங்கத்துக்கு காசு வேணாமா? அதுக்கு நிதி கொடுக்கத்தான் போறாங்கப்பா...”
“ஒண்ணுமே புரியலியே சார்...”
“வெளக்கமா சொல்ல நேரமில்ல. பக்கத்துல தான் பிராந்திக் கடை இருக்கு. அங்க போறாங்கப்பா...”
நடத்துநரின் பதிலைக் கேட்டதும் பயணி மறுகேள்வி கேட்கவே இல்லை.

x