வின்சென்ட் வான் கோ மரணத்தில் வில்லங்க சர்ச்சை!


உலகப் புகழ்பெற்ற ஓவியர் வின்சென்ட் வான் கோ மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார் என்பதுதான் இதுவரை நாமறிந்த செய்தி. ஸ்டீவன் நைஃப், கிரிகோரி ஒயிட் ஸ்மித் இருவரும் எழுதிய Van Gogh: The Life என்ற வின்சென்ட் வான் கோவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்திலும் அவர் தற்கொலை செய்துகொண்டதாகத்தான் பதிவு செய்துள்ளனர். ஆனால், தற்கொலை என்பது பொய், வான் கோ கொல்லப்பட்டார் என்கிறார் இயக்குநர் ஜூலியன் ஸ்க்னாபெல். 

வெனிஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் இவர் இயக்கிய வின்சென்ட் வான் கோ பற்றிய படம் 'At Eternity’s Gate' திரையிடப்பட்டது. இப்படத்தில்,  'வின்சென்ட் வான் கோ தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார்' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 

நூலரங்கம்: முகத்தில் அறையும் உண்மை

சிலைக் கடத்தல் குறித்த செய்திகள் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுவதோடு, முக்கிய விவாதப் பொருளாகவும் ஆகியுள்ள சூழலில், மிக முக்கியமான புத்தகமாக வெளிவந்துள்ளது  'The Idol Thief: The True Story of the Looting of India's Temples'.   

x