பேசிக்கிட்டாங்க..!


விருத்தாசலம்

தேசியவங்கி ஒன்றில் வாடிக்கையாளரும் வங்கி ஊழியரும்...
"சாா்... பணம் கட்டற சலான் வேணும்.’’
"இந்தாப்பா."
" சாா்... கொஞ்சம் பேனா தரீங்களா..?"
"அப்படியே எவ்வளவு அமவுன்ட்டுனு சொல்லிடு... தா்றேன். நீ உன் அக்கவுன்ட்ல கட்டிட்டுப் போ. பேங்க் வர்றீங்க... ஒரு பேனா எடுத்துட்டு வரத் தெரியாதா?"
(பிற வாடிக்கையாளர்கள் சிரிக்க...)
“பணம் குடுத்தா என்ன தப்பு சார். மோடி எங்க அக்கவுன்ட்ல போடுறதா சொன்ன பதினஞ்சு லட்சத்துல ரெண்டாயிரம் அட்வான்ஸ் தந்ததா நெனைச்சுக்கோங்க!’’
(வங்கி ஊழியர் திகைக்க, வாடிக்கையாளர்கள் சிரிக்கிறார்கள்.)
- விருத்தாசலம், இரா.ரமேஷ்பாபு.

சிவகங்கை

மதுரை முக்கு ரோட்டில் கல்லூரி மாணவிகள் இருவர்...
"ஜெயா உனக்கு சினிமா பிடிக்குமா? சீரியல் பிடிக்குமா?"
"ஏண்டி... ரெண்டுமேதான் பிடிக்கும்."
"அப்ப ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் சொல்லு பார்ப்போம்.”
"எடுக்கிறவங்க அழுதா அது சினிமா... பார்க்கிறவங்க அழுதா அது சீரியலு!"
"க்கும்... இது பழைய ஜோக்கு. சினிமா பார்க்கும்போது புருஷன் பர்ஸு காலி. வீட்டுல சீரியல் பார்க்கும்போது அவன் வயிறு காலி!”
“இருந்தாலும் உனக்கு மூளை அதிகம்டி."
சிவகங்கை, ஜோ.ஜெயக்குமார்.

x