“ஒரு கலைஞனுக்குச் சுதந்திரம்தான் ஆகச்சிறந்த பரிசு”- அதுல் தோடியா


இந்தியாவின் சமகால ஓவியர்களில் மிக முக்கியமானவர் அதுல் தோடியா. மும்பையைச் சேர்ந்த இவர் ஜே.ஜே.ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் கல்லூரியில் படித்தவர். மேற்படிப்பை பிரான்ஸில் முடித்த கையோடு 1980-ல் தனது ஓவியங்களைக் காட்சிப்படுத்த ஆரம்பித்தார். இதுவரை  பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இந்தியாவின் பல நகரங்களிலும் கண்காட்சிகளை நடத்தியிருக்கிறார். காந்தியின் பல்வேறு விதமான ஓவியங்களை வரைந்திருக்கிறார். 35 வருடம் ஓவியராகப் பணியாற்றி வரும் அவர் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவரிடம் பேசியதிலிருந்து... 

உங்களை ஓவியராக்கியது எது? 

நான் பிறந்து வளர்ந்த மும்பை நகரம் என்னில் நிறைய பாதிப்புகளை நடத்தியிருக்கிறது. இங்குள்ள சத்த மும், காட்சிகளும் எனக்குள் இருக்கும் கற்பனையையும் என்னுடைய சித்தாந் தத்தையும் தட்டி எழுப்பும். வெவ்வேறு விதமான மனிதர்கள், அவர்களின் கலாச்சாரம், உணவு, மதம், நம்பிக்கை, சடங்குகள், விழாக்கள், பருவநிலை எனப் பலவிதமான வாழ்க்கை. இதுதான் எனக்கு வாழ்க்கையின் மீதான ஆர்வத்தைத் தூண்டியது. ஒரே ஜென்மத்தில் பல வாழ்க்கையை வாழ ‘கலை’ அவசியம் என்று 
புரிந்தது. இயந்திரமாக ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் இந்நகரத்தை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு மட்டுமே  அப்படியான அனுபவம் கிடைக்கும். அதேசமயம் அந்த அனுபவத்தைப் பிறரிடம் பகிர்ந்துகொள்வதில் கிடைக்கும் பரவசம் தான் கலையிலேயே மூழ்கிக்கிடக்க காரணம். அதற்கான ஊடகமாகத்தான் நான் ஓவியத்தைப் பற்றிக்கொண்டேன்.

ஓவியத்துக்கான கருப்பொருளை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்? 

x