பொய்யிலே  பிறந்து.. பொய்யிலே வளர்ந்த...


கே.கே.மகேஷ்

இந்த வாரம் நாம பார்க்கப் போற ஆசாமி மகா பொய்யன். “ஆமா...மா... இவரு பெரிய அரிச்சந்திரன் பேரன்”னு நீங்க லந்தடிப்பது கேட்குது. ஒரு பத்திரிகைகாரனுக்கு செங்கல் மாதிரி துண்டு துண்டா சில உண்மை தகவல்கள் கிடைக்கும். அதை எல்லாம் ஒட்டுறதுக்கும், மேற்பூச்சு பூசி அழகுபடுத்துறதுக்கும் சிமென்ட் மாதிரி கொஞ்சமா புனைவை பயன்படுத்துவோம். இல்லன்னு சொல்லல.

ஆனா, நம்மாளுக்கு பொய்ங்கிறது ஆக்சிஜன் மாதிரி. அடுக்கடுக்கா பொய் சொல்லாட்டி, ஆஸ்துமா நோயாளி மாதிரி அவனுக்கு மூச்சுத் திணற ஆரம்பிச்சிடும். அவனோட ஒரு பொய்யை உடைச்சா, அது பத்தாகும். பத்து நூறாகும். உங்களால சமாளிக்கவே முடியாது.

பள்ளிக்கூடம் படிக்கும்போது, வீட்டுப்பாடம் செய்துட்டு வராதவங்களப் பூராம் வரிசையில நிப்பாட்டி அடிச்சாரு வாத்தியார். “ஹோம் ஒர்க் நோட்டை மறந்து வீட்ல வெச்சிட்டு வந்திட்டேன் சார்”னு சோகமாச் சொன்னான் நம்மாளு. “ஓடிப்போய் இவனோட ஹோம் ஒர்க் நோட்டை எடுத்திட்டு வா”ன்னு இன்னொரு பையனை வீட்டுக்கு அனுப்பிட்டாரு. இத அவன் எதிர்பார்க்கல. மறுபடியும் அழுதான். “ஏன்டா?”ன்னு கேட்டப்ப, “சார், பேனாவ ஸ்கூல்ல போட்டு போயிட்டேன் சார். அதனால ஹோம் ஒர்க் எழுத முடியல”ன்னான். அவருக்குச் சிரிப்பு வந்திடுச்சி. ரெண்டு சாத்து சாத்தி, “நாளைக்கு உங்க அப்பாவ கூட்டிக்கிட்டு வாடா”ன்னு சொல்லிட்டாரு.

x