ரிப்போர்ட்டர்- தி மாஸ்


“சினிமாக்காரங்களே சினிமாக்காரங்கள கிண்டல் அடிச்சிக்கிறாங்க. ஒரு படமே மற்ற படங்களை ஸ்பூஃப் பண்ணுது. இதே பாணியில, நீ ஏன் மீடியா பத்தி எழுதக்கூடாது?”ன்னு ஒரு நண்பன் கேட்டான்.

மத்தவங்கள குறை சொன்னா, “முதல்ல உன் முதுகுல இருக்கிற அழுக்கைப் பாருடா”ன்னு சொல்வாங்க. அதனால, நம்ம வரலாத்துல இருந்தே ஆரம்பிப்போம்.

`பிரபல தமிழ் நாளிதழில் உதவி ஆசிரியர் பணிக்கு பட்டதாரிகள் தேவை’ங்கிற வௌம்பரத்தைப் பார்த்து வேலைக்குச் சேர்ந்தா, ப்ரூப் ரீடரா உட்கார வெச்சிட்டாங்க. படிப்படியாத்தான் ரிப்போர்ட்டர், சப் எடிட்டராக முடியுமாம். எங்க ‘க்’ வரும், எந்த இடத்துல ‘ச்’ வராதுன்னு எனக்கு ஒரு மண்ணும் தெரியாது. வாசகர்கள் மேல பாரத்தைப் போட்டுட்டு, இஷ்டத்துக்குத் திருத்துனேன். “இந்த வருஷம் சேர்ந்த ஆட்கள்லேயே மிகச்சிறந்த ஃப்ரூப் ரீடர் நீதாம்பா”ன்னு எடிட்டர் சொன்னப்ப, நான் அப்பிடியே ஷாக்காகிட்டேன்.

திமிர் பிடிச்ச ஒரு சீனியர் சப் எடிட்டருக்குப் பதிலா, ‘கைக்கு அடக்கமா’ ஒரு சின்னப்பயல சப் எடிட்டரா போடணுங்கிறது அந்த எடிட்டரோட திட்டம் போல. பல சீனியர்களை ஓவர்டேக் பண்ணி, ஷாட்கட்ல என்னை சப் எடிட்டராக்கிட்டாரு. அப்புறம் அவர் பட்ட பாடு இருக்கே?

x