சிற்பக்கலைகளின் அனைத்து வகைகளிலும் கைதேர்ந்தவர் சிவராமசாரி. சென்னை அடையாறில் உள்ள போரம் ஆர்ட் கேலரியில் தனது கலைப் படைப்புகளைக் கண்காட்சிக்கு வைத்திருந்தார். ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் பிற சிற்பக் கலைஞர்களிடமிருந்து வேறுபட்டவர் என்பதை அவருடைய கலைப் படைப்புகளைப் பார்த்தாலே கண்டுபிடிக்க முடிகிறது. அவரிடம் பேசியதிலிருந்து...
உங்களுடைய படைப்புகள் பெரும்பான்மை சிற்பங்களிலிருந்து வேறுபட்டு தெரிகிறதே?
என்னுடைய தந்தை சிற்பங்கள் செய்பவர் என்பதால், எனக்குச் சிறுவயதிலிருந்தே சிற்பக் கலையில் பரிச்சயம் உண்டு. அவர் ஒரு தொழில்முறை சிற்பக்கலைஞராக இருந்ததால் அவர் கற்றுக்கொண்டதை மட்டுமே தொடர்ந்து செய்துவந்தார். ஆனால், நான் கற்றுக்கொண்டதை மட்டுமே செய்வதோடு நிறுத்திக்கொள்ள விரும்பவில்லை. அவற்றில் பல்வேறு முயற்சிகளை, மாற்றங்களை, கலவைகளை மேற்கொள்ள ஆசைப்பட்டேன். அதன் விளைவுதான் என்னுடைய கலைப் படைப்புகள் பிறரிடமிருந்து வேறுபட்டு தெரிவதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
எந்த மாதிரியான முயற்சிகளையெல்லாம் எடுத்திருக்கிறீர்கள்?