அமெரிக்கப் புகைப்படக்காரரைக் கொண்டாடும் இங்கிலாந்து


இங்கிலாந்தில் உள்ள தேசிய உருவப்பட கலைக் காட்சி கூடம் அமெரிக்க புகைப்படக்காரரான சிண்டி ஷெர்மனின் சுய உருவப்படங்களை முதன்முறையாகக் காட்சிக்கு வைக்க இருக்கிறது.

தன்னைத்தானே வரைந்துகொண்டு உலகப் புகழ்பெற்ற ஓவியர் ப்ரீடா காலோ போலவே, செல்ஃபி கேமரா இல்லாத காலத்திலேயே தன்னைத்தானே புகைப்படம் எடுத்து பெரும் புகழ்பெற்றவர் சிண்டி ஷெர்மன்.

சினிமாக்களில் வரும் கதாபாத்திரங்கள் முதல், கதைகளில் வரும் கற்பனை கதாபாத்திரங்கள், பக்கத்துவீட்டுப்  பெண்கள் எனத் தனக்குப் பிடித்த விதங்களில் எல்லாம் தன்னைப் புகைப்படம் எடுத்துக்கொண்டவர் இவர். இவருடைய படங்கள் வாக் இதழின் அட்டைகளிலும் இடம்பெற்றிருக்கின்றன. இவருடைய 180-க்கும் மேலான புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

x