‘‘கலைஞன் மக்களுக்காகவும் பேச வேண்டும்”- சோவன் குமார்


சென்னை ஈசிஆரில் உள்ள தக்‌ஷிண சித்ராவில் சமீபத்தில் ஒரிஸ்ஸாவின் புவனேஷ்வரைச் சேர்ந்த சோவன் குமார் தன்னுடைய கலைப் படைப்புகளைக் காட்சிக்கு வைத்திருந்தார். அடிப்படையில் சிற்பக்கலையைப் பயின்றவரான சோவன், ஓவியத்திலும் ஆர்வமுள்ளவர். சிற்பக்கலையையும் ஓவியத்தையும் கலந்தும் சில முயற்சி களை மேற்கொண்டிருக்கிறார். கண்காட்சிக் களத்தில் அவரிடம் பேசியதிலிருந்து...

சிற்பக் கலையைப் படித்த நீங்கள் ஓவியரானது எப்படி?

சிற்பக் கலைக்கு அடிப்படையே ஓவியம்தான். அதுமட்டு மல்லாமல் நான் சிற்பக் கலைஞன் என்பதோடு மட்டுமே நின்றுவிட விரும்பவில்லை. அதையும் தாண்டி பல முயற்சி களைச் செய்துபார்ப்பதில் ஆர்வம் எனக்கு உண்டு. அதனால்தான் ஓவியத்தையும் கையில் எடுத்தேன். மேலும், சிற்பங்களைப் பொறுத்தவரை இப்போது மெஷின்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. அதனால் கையால் செதுக்கப்படும் சிற்பங்களுக்குப் பெரிய அளவில் இப்போது மதிப்பில்லாமல் போய்விட்டது. ஆனால், ஓவியத்தில் என்னதான் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் இருந்தாலும் அதில் ஓவியனின் கைவண்ணம் எப்போதுமே தனித்துத் தெரியும்.

உங்கள் ஓவியங்களில் பெரும்பாலும் லாரிகளும் ட்ரக்குகளும் இடம்பெற என்ன காரணம்?

x