“நாம் வெளிப்படுத்துவதை விட மறைப்பதே அதிகம்!”- ஆனந்த் கடப்பா


ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் கடப்பா. நீர் வண்ண ஓவியங்களில் நிபுணத்துவம் பெற்றவர். ஓவியங்கள் தொடர்பான ஆய்விலும் ஈடுபட்டிருக்கிறார். சென்னையில் உள்ள போரம் ஆர்ட் கேலரியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது ‘ட்ரெண்டிங் ட்வீட்ஸ் 2’ கலைக் கண்காட்சி. அதில் தனது ஓவியங்களையும் காட்சிக்கு வைத்திருந்தார் கடப்பா. அவருடன் பேசியதிலிருந்து...

உங்களுக்குள் இருந்த ஓவியரை எப்போது அடையாளம் கண்டீர்கள்?

எதையும் வித்தியாசமாக அணுகுபவனே கலைஞன் ஆகிறான். சிறுவயதிலிருந்தே எதையும் வித்தியாசமாகப் பார்க்கும் பழக்கம் எனக்குண்டு. மேடை நாடகங்கள், பொம்மலாட்டம் போன்ற கிராமப்புற கலைகளும், என்னைச் சுற்றி நான் பார்த்த விஷயங்களும் மனிதர்களும் என்மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தின. அவைதான் என்னைக் கலைஞனாக்கின என்று சொல்லலாம். எனக்கு வண்ணங்களும் அவற்றின் கலவையில் நடக்கும் மாயா ஜாலமும் பிரமிப்பைத் தந்தன. அதனால் ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன்.

உங்கள் ஓவியங்களில் பெரும்பாலும் மனிதர்களே இருக்கிறார்களே... ஏன்?

x