பாதியில வந்து டைட்டிலை ‘வின்' பண்ணிய பிரபலம்!


நம்முடைய அரசியல் பிக் பாஸையும் 100 நாட்கள்... அதாகப்பட்டது, 15 வாரம் ஓட்டிடலாம்னுதான் நினைச்சோம். படிக்கிற வாசகர்களுக்கு மட்டுமின்றி, எழுதுகிறவருக்கே ஒவ்வொரு வரிக்கும் இடையில் கொட்டாவி வரத்தொடங்கிவிட்டது.

தூங்கினால் பிக் பாஸுக்குப் பிடிக்காது என்பதால்... அடுத்த கொட்டாவி வருவதற்கு முன்னதாக, 4-வது வாரமே கவுரவத்துடன் நிகழ்ச்சியை நிறுத்திக்கறோம் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

மோடி பிக் பாஸாகவும், ஆளுநர் புரோஹித் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த இந்த நிகழ்ச்சியில், ரஜினி, கமல், எடப்பாடி, ஓபிஎஸ், ஸ்டாலின், துரைமுருகன், வைகோ, திருமா, தினகரன், சீமான், தமிழிசை, குஷ்பு, ஜெயக்குமார், தங்க தமிழ்ச்செல்வன், சபாநாயகர் தனபால், அன்புமணி, ஹெச்.ராஜா என சுமார் 20 பேர் பங்கேற்றார்கள். தங்க தமிழ்ச்செல்வன் பாதியிலேயே சுவர் ஏறிக்குதித்து ஓடிவிட்டார். அதற்கு முன்பாகவே ஒரு அம்மணி சிறைக்குள் போய்விட்டார். சீமானும் எலிமினேட் ஆகிவிட்டார். எஞ்சியவர்கள் எல்லாம் எப்படி ஒரே வாரத்தில் காலியாகிறார்கள்? தொடர்ந்து படிங்க.

நாள் 22 காலை 8 மணி

x