இலக்கிய நோபலுக்கு இன்னொரு அகாடமி!


ஸ்வீடனில் உள்ள நோபல் அகாடமி 2018-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வழங்கப்போவதில்லை என மே மாதம் அறிவித்தது. இலக்கியப் பரிசுக்கான தேர்வுக் குழு உறுப்பினரும் எழுத்தாளருமான கேத்ரினா ஃப்ராஸ்டன்ஸனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் மீது எழுந்த பாலியல் புகாரே இதற்குக் காரணம்.

இப்போது, ஸ்வீடனைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான எழுத்தாளர்கள், நடிகர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் இணைந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு நிகரான ஒரு பரிசை வழங்கவிருக்கின்றனர். இதற்காக ஒரு அகாடமியும் தொடங்கப்பட்டுள்ளது. காலவரையறை உள்பட நோபல் பரிசுக்கான அனைத்து விதிமுறைகளும் இதிலும் பின்பற்றப்படும். வழக்கமாக நோபல் பரிசுகள் வழங்கப்படும் டிசம்பர் 10 அன்றே இந்தப் புதிய அகாடமியின் பரிசும் வழங்கப்படும். அடுத்த நாளே இந்த அகாடமி கலைக்கப்பட்டுவிடும். ஒரு விருது அமைப்பு எந்த சமரசமுமில்லாமல் நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த முயற்சி என்கிறார்கள் இந்த அகாடமியை உருவாக்கியவர்கள்.

x