“கலைஞனுக்குத் தனிமை அவசியம்” - சயம் பரத் யாதவ்


சென்னை அடையாறில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில் ‘ட்ரெண்டிங் ட்விட்ஸ்’ என்ற தலைப்பில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஏழு கலைஞர்களின் கலை வேலைப்பாடுகளைக் காட்சிக்கு வைத்திருந்தனர். அவர்களில் ஓவியர் சயம் பரத் யாதவ் 2015-ல், லலித் கலா அகாடமியின், ஓவியத்துக்கான தேசிய விருது பெற்றவர். அவரிடம் பேசியதிலிருந்து...

உங்களுக்குள் ஓவியத்தின் மீதான ஆர்வம் எப்போது வந்தது?

சிறுவயதிலிருந்தே எனக்கு ஓவியம் வரைவது பிடிக்கும். பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஓவியத்தில் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். ஹைதராபாத்தில் உள்ள எஸ்.என் ஸ்கூல் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பை முடித்தேன். அதற்கு முன்பும் ஓவியங்கள் வரைந்திருந்தாலும் பட்டப்படிப்புக்குப் பிறகு வரைந்த என்னுடைய ஓவியங்களில் முதிர்ச்சியும் நம்பிக்கையும் வெளிப்பட்டன. அந்த நம்பிக்கை, ஓவியங்களைக் காட்சிக்கு வைக்கும் அளவுக்கு வளர்ந்தது. பிற கலைஞர்களுடன் காட்சிப்படுத்தி வந்தேன். என்னுடைய முதல் தனிக் கண்காட்சி 2008-ல் நடந்தது. சென்னையில் இது இரண்டாவது கண்காட்சி.

உங்கள் ஓவியங்களில் மாடுகளே பிரதானமாக இடம்பெறுவது ஏன்?

x