காணாமல் போன 18 முட்டைகளும் ரஜினியின் எதிர்பாராத நுழைவும்!- #அரசியல் பிக் பாஸ் சீசன் 2


இது பிக் பாஸ் சீசன். தொலைக்காட்சியில் மட்டும்தான் பிக் பாஸ் நடத்துவார்களா? அடிக்கடி செய்திகளில் அடிபடும் செய்திக் கதாநாயகர்களை வைத்து நாமும், ‘நவீன பிக் பாஸ்(!)’ நடத்திக் கலாய்த்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. அந்தக் கன்னி முயற்சியின் ஆக்கம்தான் இது! மோடிதான் பிக் பாஸ். (பொறுப்புத் துறப்பு: கண்டிப்பாக இதன் மூலம் யாரையும் புண்படுத்தும் நோக்கம் எமக்கில்லை)

நாள் 1 காலை 6 மணி

`என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே’ என்ற பாடலுடன் முதல்நாள் பொழுது விடிகிறது.

“பிக் பாஸ் டைட்டில் வின்னரா ஒரு தமிழன்தான்யா ஆகணும். வந்தேறிகள வரவிடக் கூடாது” என்று ஆட்டத்தைத் தொடங்கிவைக்கிறார் பாரதிராஜா. “ஆமாங்கய்யா... நீங்க சொல்றதுதான் சரி. போட்டியாளர்களில் யாரெல்லாம் தமிழர்கள்னு ஒரு ஆய்வு நடத்தப்போறேன்” என்று உறுதியேற்கிறார் சீமான். டக்கென உஷாராகி, “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி...” என்று கமல் ஆரம்பிக்க, “தம்பி. நீங்க டென்ஷன்ல கவிதை கிவிதை சொல்லிடாதீங்க. நீங்களும் ‘நம்மவர்’தான்” என்று பாரதிராஜா சொல்ல... மூவருக்குள்ளும் கட்டிப்பிடி வைத்தியம் நடக்கிறது. இப்படி முதல் நாளிலேயே பங்கேற்பாளர்கள் எல்லாம் கோஷ்டி சேரத் தொடங்கிவிடுகிறார்கள்.

x