ஓவியரை ஓவியமாக்கிய அலங்காரப் பொருட்கள்


மெக்ஸிகோவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் ஃப்ரீடா காலோ. இவர் தனது அன்றாட வாழ்வில் பயன்படுத்திய அலங்காரப் பொருட்கள் லண்டனில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. போலியோ பாதித்த ஃப்ரீடா 1954-ல்தனது 47-வது வயதில் உயிரிழந்தார். ஃப்ரீடா வீட்டில் இருந்த அவரது ஆடைகள், அணிகலன்கள், ஒப்பனைப் பொருட்கள் ஆகியவை மெக்ஸிகோவுக்கு வெளியே காட்சிக்கு வைக்கப்படுவது இதுவே முதன்முறை. “ஃப்ரீடா இந்த அலங்காரப் பொருட்களின் மூலம் தான், தன் குறைகளை மறைத்துக்கொண்டார்.

ஒரு தன்னம்பிக்கை மிக்க பெண்ணாக, கலைஞராக வெளிப்பட்டார். அவரது ஒவியங்களுக்கும் இந்த அலங்காரப் பொருட்களுக்குமான உறவை வெளிப்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் நோக்கம்” என்கிறார் இதன் ஒருங்கிணைப்பாளர் செர்ஸ் ஹெனஸ்ட்ரோஸா. மேலும், இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஆடைகளுக்கு அருகில் அவற்றை அணிந்தபடி இருக்கும் ப்ரீடாவின் ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளன. ஃப்ரீடாவின் பெரும்பாலான ஓவியங்கள் அவர் தன்னைத் தானே ஓவியமாக வரைந்துகொண்டவைதான்.

x