“ஃபேஸ்புக் வந்தபின் இலக்கியத்தை மறந்துவிட்டோம்”- கெளதம சித்தார்த்தன்


உன்னதம் பதிப்பகம் சார்பில், ஒரே சமயத்தில் பத்து மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன். சர்வதேச இலக்கிய ஆளுமைகளின் நேர்காணல்கள், சிறுகதைத் தொகுப்புகள், இலக்கியம் சார்ந்த ஆய்வு எழுத்துகள் போன்றவை இந்த நூல்களுள் அடங்கும். தனது பதிப்புப் பணியைப் பற்றி கெளதம சித்தார்த்தனிடம் பேசியதிலிருந்து...

படைப்புப் பணியிலிருந்து இப்போது பதிப்புப் பணி… எப்படி இந்த மாற்றம்?

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் வந்த பிறகு தீவிர இலக்கியம் என்பதையே மறந்துவிட்டோம். சர்வதேச எழுத்தாளர்கள் ஃபேஸ்புக்கில் அதிகம் எழுதுவதில்லை. இங்கு எழுத்தாளர்கள் பலருக்குக் கருத்து தெரிவிப்பதே முழுநாள் வேலையாக இருக்கிறது. இதனால், இங்கு தீவிரஇலக்கியத்துக்கான மிகப் பெரிய வெற்றிடம் இருந்துகொண்டேயிருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப நம்மை நாம் தயார்செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு நம்முடைய இலக்கியப் பார்வையைக் கூர்தீட்டிக்கொள்ள வேண்டும். அதற்கான புத்தகங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பதிப்புப் பணியில் முழு மூச்சில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறேன்.

இலக்கிய மொழிபெயர்ப்புகளுக்கு என்ன மாதிரியான வரவேற்பு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

x