அடிமைத்தனத்தின் கடைசி ஆவணம்


20-ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம் வரையிலும் அடிமை முறை, உலகின் பல்வேறு பகுதிகளில் நடைமுறையாக இருந்துவந்துள்ளது. அதன் கடைசி சாட்சியாகக் கருதப்படும் குட்ஜோ லூயிஸ் கஸூலா என்பவரின் கதை ‘பாரக்கூன்:தி ஸ்டோரி ஆஃப் தி லாஸ்ட் ஸ்லேவ்’ (Barracoon: The Story of the Last Slave) என்ற புத்தகமாகத் தற்போது வெளிவந்துள்ளது. 1860-களில், ஆப்பிரிக்க மக்கள் கப்பல் வழியாக அமெரிக்

காவுக்கு அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டனர். அடிமை வர்த்தக வரலாற்றின் கடைசிப் பதிவு இதுதான். அப்படிக் கொண்டுவரப்பட்டவர்களில் கடைசியாகப் பிழைத்தவர்தான் கஸுலா. ‘தேர் ஐஸ் வேர் வாட்ச்சிங் காட்’ (Their Eyes Were Watching God) என்ற புகழ்பெற்ற நாவலை எழுதிய பெண் எழுத்தாளர் ஸோரா நீல் ஹர்ஸ்டன் இவரைப் பேட்டிகண்டு இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். 1930-களில், எழுதப்பட்ட இப்புத்தகம் தற்போதுதான் பதிப்பிக்கப்பட்டு வெளிவருகிறது. இதன் ஆசிரியர் 1960-ல் இறந்துவிட்டார். தற்போது இந்தப் புத்தகத்தை ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

-ஜெ.சரவணன்

நூலரங்கம்: நம்பிக்கை அளிக்கும் ‘நடுகல்’

x