பாப் டைலனின் கிட்டார் பொக்கிஷம்!


அமெரிக்க மேடைப் பாடகரும் பாடலாசிரியருமான பாப் டைலன் 2016-ல் நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்துக்காக வழங்கப்படும் நோபல் பரிசு முதல் முறையாக ஒரு பாடலாசிரியருக்கு வழங்கப்பட்டது.

இவரது பாடல்கள் போருக்கு எதிராகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் முழங்குபவை. இப்போது, டைலன் பயன்படுத்திய கிட்டார், 4 லட்சத்து 95 ஆயிரம் டாலருக்கு ஏலம் போயிருக்கிறது. கிராமியப் பாடகராக அறியப்பட்ட டைலனை ராக் இசையிலும் புகழ்பெறச் செய்ததில் இந்த கிடாருக்கு முக்கியப் பங்குண்டு. இதுவே அந்த கிட்டாருக்கு பொக்கிஷ மதிப்பைத்  தந்திருக்கிறது!

x