“நாடகம் ஒரு வலிமையான விழிப்புணர்வுக் கருவி”- அருண்மொழி சிவப்பிரகாசம்


அண்மையில் கதுவாவில் எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தேசத்தை உலுக்கியது. இதேபோல் நாட்டின் பல பகுதிகளில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள். இவற்றை முன்வைத்து ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிப்புப் பள்ளி மாணவர்கள் சென்னை லயோலா கல்லூரியில் ‘துளிர் தின்னும் வேலிகள்’ என்ற நாடகத்தைக் கடந்த வாரம் அரங்கேற்றினார்கள். இந்த நாடகத்தை பகுருதீன், அருண்மொழி சிவப்பிரகாசம் இருவரும் இயக்கியிருக்கிறார்கள். நாடகம் பற்றி அருண்மொழி சிவப்பிரகாசத்திடம் பேசியதிலிருந்து...

இந்த நாடகத்தின் நோக்கம் என்ன?

பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகளை தினந்தோறும் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். அனுதாபப்படுவதோடு நம் எதிர்வினைகளை நாம் முடக்கிக்கொள்கிறோம். மேலும், சிலர் பாதிப்புக்குள்ளானவர்கள் மீதே குற்றம் சுமத்துகிறார்கள். ‘தனக்கு வந்தால்தான் தலைவலி’ என்று பழமொழி உண்டு. பிஞ்சுக் குழந்தைகளின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமையின் கோர விளைவுகளை நாடகத்தின் மூலம் அழுத்தமாகச் சொல்ல முடியும் என்று நம்பினோம். அதற்காகவே இந்த நாடகத்தைத் தயாரித்து அரங்கேற்றினோம். இதுபோன்ற விஷயங்களுக்கு நாடகம் ஒரு வலிமையான விழிப்புணர்வுக் கருவி.

நாடகத்துக்கான வரவேற்பு எப்படி?

x