பாரதி படைப்புகள் அரசுடமையான வரலாறு


மகாகவி பாரதியாரைப் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டுவருபவர் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி. இவர் பாரதி படைப்புகளின் காப்புரிமைக்கான போராட்டங்கள் பற்றியும் பாரதி படைப்புகள் அரசுடைமையாக்கப்பட்ட வரலாற்றைப் பற்றியும் நூலாக எழுதியுள்ளார். “அந்தப் பாடல் யாருக்குச் சொந்தம்? பாரதி படைப்புகளின் காப்புரிமை போராட்டம்” (‘Who Owns that Song? The Battle for Subramania Bharati’s Copyright’) என்ற இந்த ஆங்கில நூலை ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன (எம்ஐடிஎஸ்)வளாகத்தில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி இந்த நூலை வெளியிட்டார். ஆங்கிலத்தில் பாரதியைப் பற்றிய நூல்கள் மிகக் குறைவாகவே வெளிவந்திருப்பதால் தமிழகத்துக்கு வெளியே பரவலாக அவர் அறியப்படவில்லை. இதுபோன்ற நூல்கள் அந்தக் குறையைப் போக்கும்.

x