தடை செய்யப்பட்ட புகைப்படங்களின் கண்காட்சி


1930-களில், அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட லட்சக்கணக்கான புகைப்படங்கள் லண்டனில் முதல் முறையாகப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்கள் அமெரிக்காவின் கிராமப்புறங்களின் நிலையைப் பிரதானமாகப் பதிவு செய்தவை. அமெரிக்க விவசாயிகளின் உண்மையான நிலையைப் பிரதிபலிப்பவையாக இருந்ததால், தடை செய்யப்பட்டன. இந்தப் புகைப்படங்களின் நெகட்டிவ்களில் தடை செய்யப்பட்டதற்கான அடையாளமாகத் துளையிடப்பட்டன. அவற்றைப் புகைப்படங்களில் கறுப்பு வட்டங்களாகப் பார்க்க முடிகிறது. வாக்கர் இவான்ஸ், டொரொத்தி லாஞ்ச், ரசல் லீ போன்ற 20-ம் நூற்றாண்டின் மிகப் பிரபலமான புகைப்படக் கலைஞர்களால் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் லண்டனில் உள்ள ஒயிட்சேப்பல் கேலரியில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

-ஜெ.சரவணன்

x