“புத்தகங்கள் மீதான குழந்தைகளின் பயத்தைப் போக்க வேண்டும்” -மு. கலைவாணன்


கவிஞர் முத்துக்கூத்தனின் மகனும் கையுறை பொம்மலாட்ட கலைஞருமான மு.கலைவாணன் குழந்தைகளுக்கான எட்டு சிறு நூல்களை எழுதியுள்ளார். உழைப்பாளர் தினத்தில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அவை வெளியிடப்பட்டன. இந்தப் புத்தகங்களைக் குழந்தைகளே வெளியிட்டு அவற்றைப் பற்றிய உரையும் நிகழ்த்தினார்கள். இந்தப் புத்தகங்கள் பற்றி கலைவாணனிடம் பேசியதிலிருந்து...

பொம்மலாட்டக் கலைஞரான நீங்கள் எழுத்தாளரானது எப்படி?

42 வருடமாக பொம்மலாட்டம் நடத்திவருகிறேன். சிறுவயதில் தந்தை என் கையைப் பிடித்துப் பல இடங்களுக்கு நடந்தே அழைத்து செல்வார். அப்படிச் செல்லும்போதெல்லாம் பல விஷயங்களையும் பல மனிதர்களைப் பற்றியும் பேசுவார். அவர் இருந்தவரையில் எதையும் எழுதத் தோன்றவில்லை. 2005-ல் தந்தை இறந்த பிறகு, அவர் சொன்னவற்றையெல்லாம் கதைகளாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

குழந்தைகளுக்காக எழுதுவது எளிதான காரியமில்லையே?

x