இளைஞர்களை சிறு பத்திரிகை உலகுக்கு ஈர்க்க வேண்டும் - பரிசல் சிவ.செந்தில்நாதன்


உயிர்மை பதிப்பகம் வழங்கும் சுஜாதா விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, காலாண்டு இதழாக வெளிவந்துகொண்டிருக்கும் ‘இடைவெளி’, இந்த ஆண்டின் சிறந்த சிற்றிதழுக்கான விருதை வென்றிருக்கிறது . இந்த இதழை நடத்திவருபவர் பரிசல் சிவ.செந்தில்நாதன். 25 வருடங்களுக்கு மேலாகப் பதிப்புத்துறையில் இயங்கிவருபவர். அவருடன் பேசியதிலிருந்து...

இடைவெளிசிற்றிதழைத் தொடங்கியது எதற்காக?

1990-களுக்குப் பிறகு பல இளைஞர்கள் இலக்கியத்தின் பக்கம் வந்தார்கள். ஆனால், இன்றைய இளைஞர்களின் பெரும்பகுதி நேரத்தை சமூக ஊடகங்கள் எடுத்துக்கொள்கின்றன. அதனால், இளைஞர்களிடம் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்த இதழை உருவாக்கினோம். இளைஞர்களின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இதழ் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இன்றைய இளைஞர்களை சிறுபத்திரிகை உலகுக்கு ஈர்ப்பதுதான் இதன் நோக்கம்.

இதழின் தனிச்சிறப்பு என்று எதைச் சொல்வீர்கள்?

x