10,000 இடங்களில் கார்ல் மார்க்ஸ்!


மே 5, 2018 அன்று கம்யூனிஸத்தின் தந்தை கார்ல் மார்க்ஸின் 200-வது பிறந்தநாள். அன்றிலிருந்து இந்த ஆண்டு முழுவதும் மார்க்ஸின் வாழ்வு, அவரது பங்களிப்புகள் தொடர்பான கருத்தரங்குகள், கலாச்சார நிகழ்வுகளை நாடு முழுவதும் நடத்தவிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. தமிழகத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லெனின் எழுதிய ’கார்ல் மார்க்ஸ்’ என்ற கட்டுரையைத் தமிழில் புத்தக வடிவில் பாரதி புத்தகாலயம் வெளியிடவுள்ளது. இது ஒலிவடிவிலும் வெளியிடப்பட இருக்கிறது. மேலும், தமிழகமெங்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைகள், கட்சி இதழ்களுக்கான வாசகர் வட்டங்கள் ஆகியவற்றைச் சேர்த்து மொத்தம் 10,000 இடங்களில், மார்க்ஸ் தொடர்பான வாசிப்புக்கு திட்டமிடப் பட்டுள்ளது. மே 4-ல் தொடங்கி ஒரு மாத காலம் அனைத்து இடங்களிலும் இந்த வாசிப்பு மேளாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

x