விலையில்லா மூன்று மார்க் வழங்கும் திட்டம்!


பிளஸ் 2 வேதியியல் வினாத்தாள் கடினமாக இருந்ததாம். குறிப்பாக, மூன்று மதிப்பெண் கேள்விகள். இதனால் பிளஸ் 2 வேதியியலில் ‘சென்டம்’ எடுப்பது கடினம் என்று மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதைப் பற்றி அரசியல் பிரமுகர்களிடம் நாம் கருத்துக் கேட்டோம் (கற்பனையாத்தான்).

”காரணம், முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சிதான்.

வேதியியலை ‘வேத’வியல் என்று சொல்லி எதிர்த்தவர்கள் அவர்கள். இப்போது ஒன்றும் பிரச்சினை இல்லை. விடாப்பிடியராக அம்மாவின் வழியில் பொற்கால ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் நாங்கள் விலையில்லா மூன்று மார்க் வழங்கும் திட்டம் தொடங்குவோம் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்!”

”எங்கள் ஆட்சியில் எத்தனை பேர் வேதியியலில் 300 -க்கு 300 எடுத்தார்கள் என்பதைக் கழகக் கண்மணிகளிடம் கேட்டுப்பாருங்கள். வரலாறு தெரியாமல் பேசக் கூடாது, படிச்சவன் ஏட்டைக் கெடுத்தான்... எழுதுனவன் பாட்டைக் கெடுத்தான்னு சும்மாவா சொன்னாங்க!”

x