அண்ணே... வடிவேலு அண்ணே... வணக்கம்ணே.
நானும் மதுரைக்காரன்தாம்ணே. உன் ரசிகன்னு சொல்றதவிட உன் வெறியன்னு சொல்றதுல பெருமைப்படுறவன்ணே. அது என்னமோ தெரியலன்ணே மதுரைக்காரனான எனக்கு மட்டுமில்லண்ணே... இந்தத் தமிழகத்துக்கே உம்மேல ஒரு தனிப்பாசம்ணே. ‘என் ராசாவின் மனசுல’ படத்துல வடிவேலுங்கிற உன் சொந்தப் பேரோடவே ஒரு ஒல்லிப்பிச்சானா உள்ள வந்த நீயி... உன்னோட காமெடி நடிப்பால எங்க கவலைகள சல்லிசல்லியா நொறுக்கி மனசுக்குள்ள கில்லியா வந்து சட்டுன்னு உக்காந்துட்டண்ணே. அடிவாங்கியே அடிமனசுல எடம் புடிச்ச ‘ஸ்நேக் பாபு’ண்ணே நீ.
‘போடாப் போடா புண்ணாக்கு... போடாத தப்புக் கணக்கு’னு ஆரம்பிச்சு நீ நடிச்ச காட்சிகள் எல்லாம் பார்த்தவன் வயித்தைதான் புண் ஆக்குச்சே தவிர யாரோட மனசையும் புண் ஆக்கல. அதுவுமில்லாம, அடுத்தவனைத் திட்டாம, அடிக்காம உன்னையே வருத்திக்கிட்டு எல்லாரையும் ரசிச்சு, சிரிக்க வெச்ச பாரு... அந்த யதார்த்தமான காமெடிதான் சின்னக் குழந்தைல இருந்து சீரியல் பார்க்குற பெருசுங்க வரை உன்னை ரசிக்க வெச்சிது.
சும்மா சொல்லக்கூடாதுண்ணே... உங்க வசனங்கள், ஒவ்வொண்ணும் பொன்னெழுத்துல பொறிக்க வேண்டிய தீர்க்க தரிசன வார்த்தைகள் அண்ணே... சமத்துவ சித்தாந்தத்தை ‘உனக்கு வந்தா ரத்தம்... எனக்கு வந்தா தக்காளி சட்னியா...’ங்கிறதை விட இதுவரைக்கும் உலகத்துல யாரும் இவ்வளவு எளிமையா சொன்னது இல்லண்ணே. எவ்வளவு பெரிய போராட்டக் களத்துலயும் அரசியல்வாதிங்க சட்டை கசங்காம பிரியாணியை சாப்பிட்டுக் கிளம்புற காலத்துல, ‘சண்டையில