கோமாவா… எண்டாஸா… எது வேணும் தம்பி ஒனக்கு?


முதல் நாள் 6.20. மறுநாள் 5.60. அடுத்த நாள் 4.40. முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்ட சின்னம்மா சசிகலாவின் செல்வாக்கு சரிந்தது போல, சடார் சடார் எனக் குறைந்தது ஹீமோகுளோபின். “அஞ்சுக்குக் கீழ போச்சுன்னா கோமா...” என நண்பர் திகிலூட்டம் தர, வேண்டியவர்கள், வேண்டாதவர்கள்(!) என சுற்றி நின்ற அத்தனை பேரையும் ஒரு ரவுண்டு பார்த்துக் கொண்டேன்.

போதாதற்கு ‘`நேரா நேரத்துக்கு சாப்பிடாததால் கொடலு புண்ணாகிக்கெடக்கு... ஹெவி பிளட் லாஸ், எண்டோஸ்கோப்பி பண்ணாத்தான் கண்டுபிடிக்க முடியும்'' என்று தன் ‘பில்’லுக்கான எக்ஸ்ட்ரா வழிகளை ஏற்படுத்திக் கொண்டே போனார்  டாக்டர்.

10 வருஷத்துக்கு முன்னாடி இப்டித்தான் ரத்த வாந்தி எடுத்து, இஸபெல்லா ஆஸ்பிட்டல்ல எண்டோஸ்கோப்பி எடுத்தது. காபியவே கடிச்சு முழுங்குற பரம்பர... அப்படியே ஒரு வயர உள்ள விட்டு முழுங்கு முழுங்குனா.. எப்படி கடிக்காம முழுங்க முடியும்.,. கடிச்சா திட்டராய்ங்க..

நண்பருக்கு ஒருமுறை மியாட்ல எண்டோஸ்கோப்பி எடுக்கப் போனோம். லிஃப்டுல ஏறும்போதே, எங்களோட வந்த ஆஜானுபாகுவா இருந்த ஆறடி மனிதர் ஒருத்தர்,,, ‘`எதிரிக்குக்கூட இந்த நெலம வரக்கூடாதுங்க.. தொண்டைக்குள்ள கம்பிய விட்டு சும்மா கடை கடைன்னு கடையிராய்ங்க பாருங்க... யப்பாடி, நினச்சாலே கொடலப் புரட்டுது...'' எனப் புலம்ப ஆரம்பித்தார். கம்பி என்றதும் எனக்கு தேவையில்லாமல் அம்மன் டிஎம்டி முறுக்குக் கம்பியெல்லாம் கண்ணுக்குள்ள பளீர் பளீர்னு வந்து போச்சு!

x