வெயிலோடு விளையாடி... ஆட்டம் போட்டோமே!!


“எல்லாம் 50 வருஷம், 100 வருஷம் பழமையான கல்லூரிகளாப் போடுறீங்களே, எங்க காலேஜ் இப்பத்தான் ஆரம்பிச்சிருக்காங்க. அப்ப நாங்க, காமதேனுவுக்காக 50 வருஷம் காத்துக்கிட்டு இருக்கணுமா?” என்று மாணவர் அருண் ஃபோன் பண்ணியே கேட்டுவிட்டார். “நீ எந்த காலேஜ்னு சொல்லுப்பா. இந்த வாரமே வர்றோம்” என்று விருதுநகர் ஸ்ரீவித்யா கலை, அறிவியல் கல்லூரிக்குப் போனோம்.

வெறுமனே 500 மாணவர்கள் மட்டுமே படிக்கிற புதிய கல்லூரி என்றாலும், அத்தனை பேரும் தங்கள் தனித்திறமையின் வாயிலாக கவனத்தை ஈர்ப்பவர்களாக இருந்தார்கள். அதில் 90 சதவிகிதம் பேர் கிராமத்து மாணவர்கள், பலர் கிராமியக் கலையில் ஆர்வமுள்ளவர்கள். வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி வளர்ந்த இந்த மாணவர்கள் தென்மாவட்டத்தில் எங்கே கலைவிழா நடந்தாலும் பரிசுகளை அள்ளிக்கொண்டு வந்துவிடுகிறார்கள்.

சுற்றுதே, சுற்றுதே பந்து!

x