எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’, ‘பூனாச்சி’ நாவல்கள் ‘ஒன் பார்ட் வுமன்’ (அநிருத்தன் வாசுதேவன்), ‘பூனாச்சி, தி ஸ்டோரி ஆஃப் அ பிளாக் கோட்’ (என்.கல்யாணராமன்) என்ற தலைப்புகளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இந்த நாவல்களின் ஆங்கில வடிவத்தை வெளியிடும் உரிமையை க்ரோவ்/அட்லாண்டிக் என்ற அமெரிக்க பதிப்பகத்திடம் விற்றிருக்கிறது ‘காலச்சுவடு’ பதிப்பகம். ‘ஒன் பார்ட் வுமன்’ நாவலை ஜெர்மன், ஃப்ரெஞ்சு, செக் மொழிகளிலும் ‘பூனாச்சி’ நாவலை கொரிய மொழியிலும் மொழிபெயர்ப்பதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியிருக்கின்றன. திசையெட்டும் தமிழ்ப் படைப்புகள் செல்லட்டும்!