எலியாரே எலியாரே எங்க போனீங்க?!


எலியோடு பகிர்ந்துண்ட கடைசித் தலைமுறை நாமதான். சும்மா சொல்லலைங்க. என் நண்பன் அழகு வீட்ல, அடிக்கடி தேங்காய் முறியை எலி தூக்கிட்டுப் போய்டும். கட்டிலுக்கு அடியில, பீரோ இடுக்கில் இருந்தெல்லாம் கண்டுபிடிச்சி சட்னி வெச்சுக் குடுப்பாங்க அவங்க அம்மா.

அவங்க வீட்டுப் இரும்பு பீரோ சரியா மூடாம, கட்டைவிரல் நுழைகிற அளவுக்கு ஒரு ‘தொண்டி’ விழுந்துடுச்சி. அது போதாதா? உள்ளே போய் குடித்தனம் நடத்தி, குழந்தை, குட்டிகளையும் பெத்துக்கிடுச்சி எலி. எல்லா வீட்டலயும்போல அவங்க வீட்லேயும் நல்ல பீரோ அம்மாவுக்கு. இத்துப்போன பழைய பீரோ, நண்பன் அழகுக்கும், அவங்க அப்பாவுக்கும். அழகு பக்கத்துல போனாலே, எலி உச்சா ‘மணக்கும்’.

திடீர்னு ஒருநாள் அவனோட அக்கா குழந்தைக்கு நோவு. “தாய்மாமன் அழுக்கு வேட்டியில போட்டு உருட்டுனா, சீர் தட்டுனது (உடல்வலி) சரியாகிடும்”னு பக்கத்து

வீட்டுப் பாட்டி பக்குவம் சொல்லிருக்கு. அதை நம்பி அக்கா, அவனோட அழுக்கு கைலியை வாங்கிக்கொண்டு போக, குழந்தைக்கு காய்ச்சலே வந்திருச்சி. அக்காவோட

x