மழையோ வெயிலோ... சரக்கை மடக்கு!


கடலூர்! ஒரு பக்கம் கடல்-வறண்ட மணல் பரப்பு, இன்னொரு பக்கம் ஆறு-முப்போகம் விளையும் நெல்வயல்கள். ’பெப்பர் - சால்ட்’ ஸ்டைலில் வித்தியாசமான மாவட்டம்.

மாவட்டத்தின் தெற்கு எல்லையான கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் இருந்து, அது முடிவடையும் வடக்கு எல்லையான கெடிலம் ஆற்றுப்பகுதி வரைக்கும் நம்ம இரும்பு (தகர?) குதிரையில் பயணித்தேன். எடுத்த எடுப்பிலேயே ஒரு வில்லங்கம்தான் கண்ணில் விழுந்தது. போலீஸ் சோதனைச் சாவடி.

அங்கிருந்த உதவி ஆய்வாளர் பெரிய மீசை மீன்கடைக்காரரிடம் மிரட்டலாக கையேந்த... அவரும் ’கவர்ச்சி’யாக கைலியை ஒதுக்கி பட்டாபட்டி டிராயரில் சில்லரை துழாவிக் கொண்டிருந்தார். “பேருதான் வாகன சோதனை. பத்து ரூபா குடுத்தா.  போலீஸ் ஸ்டேஷனையேகூட  பேர்த்து எடுத்துக்குனு போவலாம்” என்கிறார்கள் கடைக்காரர்கள்.

x