பழைய வீடு தந்த ஆர்வம்!


கட்டிடக் கலைக்கான நோபல் என்று கருதப்படும் ‘ப்ரிட்ஸ்கர் கட்டிடக் கலைப் பரிசை’ முதல் முறையாக ஒரு இந்தியர் வென்றிருக்கிறார். விருது வென்ற  பாலகிருஷ்ண தோஷிக்கு வயது 90. மும்பையில் உள்ள ஜேஜே கட்டிடக்கலைப் பள்ளியில் பயின்றவர். ஐஐஎம் (பெங்களூரு), சுற்றுச்சூழல் திட்டமிடல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான மையம் (அகமதாபாத்), தாகூர் நினைவகம் என பல கட்டிடங்களை வடிவமைத்தவர் இவர்.

அறைக்கலன்களை உருவாக்குதைத் தொழிலாகக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவரான தோஷி தனது தாத்தாவின் வீட்டைப் பார்த்துக் கட்டிடக் கலை மீது ஆர்வம்கொள்ளத் தொடங்கியதாகச் சொல்லியிருக்கிறார்.

என்றும் புதியவன்!

கல்கியின்  ‘பொன்னியின் செல்வன்’ மூன்றாவது முறையாக 'கல்கி'யில் தொடராக வெளியிடப்பட்டுக் கடந்த வாரம் நிறைவுபெற்றிருக்கிறது. 1951-54 காலகட்டத்தில் முதல் முறையாக வெளியான இந்த நாவல், ஐந்து பகுதிகள், 2400 பக்கங்கள் கொண்டது. இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டிருப்பதோடு, நாடகம், ஒலிநாடா, அனிமேஷன், காமிக்ஸ் என்று பல்வேறு நவீன வடிவங்களையும் அடைந்திருக்கிறது. தமிழ் நாவல் வரலாற்றில் ஈடு இணையற்ற புகழையும் வாசகர் பரப்பையும் தக்கவைத்திருக்கும் ‘பொன்னியின் செல்வனு'க்கு வயதாவதே இல்லை!

x