பறவைகள் சரணாலயத்துக்குப் பகலில் போனதுபோல் இருக்கிறது மதுரை யாதவர் கல்லூரி. மாணவிகளைச் சொல்லவில்லை. மரங்கள் எல்லாம் பறவை எச்சங்களால் வெண்ணிறமாகக் காட்சி தருவதையும், தரையெல்லாம் நீலம், பச்சை, சாம்பல், வெள்ளை, கருப்பு வண்ண இறகுகள் கிடப்பதையும் சொல்கிறேன். 1969-ல்
தொடங்கப்பட்ட யாதவர் கல்லூரி, மதுரையின் முக்கியமான கல்வி நிறுவனங்களில் ஒன்று. சமூக, பொருளாதாரரீதியில் பின்தங்கிய மாணவர்களின் சொர்க்கபுரி. இப்போது இன்னும் நவீனமாகியிருக்கிறது.
முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன், குன்றக்குடி பொன்னம்பலஅடிகளார், இயக்குநர் அகத்தியன் (இயற்பெயர் கருணாநிதி), பாலசுப்ரமணியம் ஐ.பி.எஸ்., பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். என்று முக்கிய ஆளுமைகள் பலர் இங்கு படித்தவர்கள். தற்போது 2,912மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேகத் திறமைகள் இருக்கின்றன என்றாலும், முதல் பார்வையிலேயே நம்மைக் கவர்ந்த சில மாணவர்கள் மட்டும் இங்கே.
தமிழருவி திருவேங்கடம்