ரீல் அந்து போச்சு: மொக்கை படங்களை கலாய்க்கும் ஜாலி விமர்சனம்


சில திரைப்படங்களின் தலைப்பையும் போஸ்டரையும் பார்க்கும் போதே ‘இப்படி எல்லாம் படம் எடுப்பவர்கள் யார்?’ என்று யோசிப்போம்.  இப்படிப்பட்ட படங்களைக் கவனத்துக்குக் கொண்டுவருகிறது ‘பரிதாபங்கள்’ என்ற யூ-டியூப் சேனல்  முன்பு ‘ரீல் அந்து போச்சு’ என்று நடத்தப்பட்ட நிகழ்ச்சி ‘பரிதாபங்கள் டாக்கீஸ்’  என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.  

‘சாதனை', ‘ஜமீன் கோட்டை', ‘விடாயுதம்', ‘நீதானா அவன்', ‘காசிமேடு கோவிந்தன்' என இவர்கள் இதுவரை 28 படங்களை ஜாலி விமர்சனம் செய்திருக்கிறார்கள். மயிலாப்பூரில் உள்ள இவர்களுடைய அலுவலகத்துக்குச் சென்றால், அடுத்த நிகழ்ச்சிக்காக  ‘விஜய நகரம்' என்கிற படத்தை சிரத்தையாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

உண்மையைச் சொல்லும் விமர்சனம்

“சில படங்களைத் திரையரங்கில் பார்க்கும்போதே, மனசுக்குள் பயங்கரமாகக் கலாய்த்துக்கொண்டிருப்போம்..ஆனால், பொது வெளியில் அதைச் சொல்ல முடியாது. அதையே இன்னொருத்தர் சொல்லும்போது ரசிப்போம். படம் பார்க்கும்போது மனதில் என்ன தோன்றுமோ, அதை அப்படியே விமர்சனமாகச் சொல்லிவிடுகிறோம். அதனால்தான் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கிடைத்திருப்பார்கள்” என்கிறார் இந்த நிகழ்ச்சியின் இயக்குநரும் தொகுப்பாளர்களில் ஒருவருமான முத்து.

x