கோவையிலிருந்து மலைக் காடுகள் நிறைந்த சாலைகள் வழியாக அட்டப்பாடிக்குச் செல்பவர்கள் ‘கோவைக்கு அருகில் இப்படியொரு அற்புதப் பிரதேசமா’ என்று சிலிர்த்துப் போவார்கள்.
கோவையிலிருந்து புறப்பட்டால் வெறும் 28 கி.மீ. தொலைவுதான் ஆனைகட்டி. அங்கிருந்து தொடங்கும் அட்டப்பாடி மலைக் காடுகள் வழியாக புதிதாக ஒரு பயணம் போய் வரத் தீர்மானித்தேன். காலை 7.35 மணிக்குப் புறப்பட்ட எனது ஆக்டிவா நெரிசல் மிக்க நகரச் சாலைகளைக் கடந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கணுவாயை எட்டும்போது மணி 8.55. இங்கிருந்தே தொடங்குகின்றன மாங்கரை, ஆனைகட்டி மலைகள்.
கத்தரிக்கப்பட்ட மலை