சென்னை: வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.50 உயரும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி என தெரிவித்துள்ளார்
தற்போது ரூ.803க்கு விற்பனையாகும் சிலிண்டரின் விலை இனி ரூ. 853 ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மானிய விலையில் கிடைக்கும் உஜ்வாலா சிலிண்டரின் விலை 550 ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கலால் வரி லிட்டருக்கு மேலும் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இன்றைய தினம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சில்லறை விற்பனை விலை உயருமா? என்ற அச்சம் நிலவுகிறது.
ஆனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளன. கலால் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை அதிகரிக்காது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.