பத்ராசலம்: தெலங்கானா மாநிலம், பத்ராசலத்தில் நேற்றுமுன்தினம் அம்மாநில வேளா்ண் துறை அமைச்சர் தும்மல நாகேஸ்வர ராவ் சுற்றுப்பயணம் மேற் கொண்டார். அவருடன் பத்ரா சலம் சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் வெங்கட்ரா வும் உடன் இருந்தார்.
அப்போது, காங்கிரஸ் தொண்டர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு கீழே சாய்ந்தார். இதனை பார்த்த எம்.எல்.ஏ டாக்டர் வெங்கட்ராவ், அவரின் மார்பின் நடுவில் தனது இரண்டு கைகளையும் சேர்த்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்து சிபிஆர் சிகிச்சை அளித்தார். இதன் காரணமாக சில நிமிடங்களிலேயே அந்த நபர் கண் திறந்து பார்த்தார். உடனடியாக பத்ராசலம் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.