‘மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்’ - தமிழ்நாடு போல தைரியமாக எதிர்ப்போம் - ராஜ் தாக்கரே அறைகூவல்


மும்பை: தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்புக்கு பாராட்டுகள். மொழி பிரச்சினையில் இந்தி வேண்டாம் என தமிழ்நாட்டு மக்கள் தைரியமாக சொல்கிறார்கள். மகாராஷ்டிராவில் மராத்தி மொழியை பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள் என மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜ் தாக்கரே, “எங்கள் மும்பையில், மராத்தி பேசத் தெரியாது என்று சொல்கிறார்கள். அவர்கள் முகத்தில் அறை கொடுப்போம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த மொழி உண்டு, அது மதிக்கப்பட வேண்டும். மும்பையில், மராத்தி மதிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்புக்கு பாராட்டுகள். மொழி பிரச்சினையில் இந்தி வேண்டாம் என தமிழ்நாட்டு மக்கள் தைரியமாக சொல்கிறார்கள். அதேபோல்தான் கேரளாவும். மகாராஷ்டிராவில் மராத்தி மொழியை பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள். மும்பையில் இருந்து கொண்டே மராத்தி பேச மறுக்கிறார்கள்.

நாளை முதல், ஒவ்வொரு வங்கியையும், ஒவ்வொரு நிறுவனத்தையும் சரிபார்க்கவும். மராத்தி பயன்படுத்தப்படுகிறதா என்று சரிபார்க்கவும். நீங்கள் அனைவரும் மராத்திக்காக உறுதியாக நிற்க வேண்டும்,

மகாராஷ்டிர மக்கள் சாதி அடிப்படையில் பிளவுபடுவதை நிறுத்த வேண்டும். மாநில ஆட்சியாளர்கள் உண்மையான பிரச்சினைகளை மறைக்க, மக்களை சாதி அடிப்படையில் பிளவுபடுத்துகிறார்கள்.

மகாராஷ்டிராவின் இளைஞர்கள் முதலில் வாட்ஸ்அப்பில் வரலாற்றைப் படிப்பதை நிறுத்த வேண்டும். இது உங்களை அரசியல் ரீதியாகப் பிரிக்கவும், மராத்தியர்களாக ஒன்று சேர்வதைத் தடுக்கவும் செய்யப்படுகிறது.

இது நமது கவனத்தைத் திசைதிருப்புகிறது, அதானிக்கு நிலங்களை வழங்குவது போன்ற வேலைகள் அமைதியாக செய்யப்படுகின்றன. அதானி நம் அனைவரையும் விட மிகவும் புத்திசாலியாக மாறிவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்

x