தியாகிகள் தினம்: பகத்சிங், ராஜ்குருவுக்கு பிரதமர் புகழாரம்


பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “ மார்ச் 23-ல் தியாகிகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரின் உன்னத தியாகத்தை நமது தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. அச்சமின்றி, சுதந்திரத்துக்காகவும், நீதிக்காகவும் அவர்கள் நடத்திய போராட்டம் நமது அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. அவர்கள் தேசத்துக்காக செய்த உச்சபட்ச தியாகம் போற்றுதலுக்குரியது" என்று கூறியுள்ளார்.

x