ம.பி.யில் கார், ஜீப் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு


ம.பி.யில் கார் மற்றும் ஜீப் மீது காஸ் டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

ம.பி.யின் தார் மாவட்டத்தில் பத்னாவர்-உஜ்ஜைனி நெடுஞ்சாலையில் உள்ள பமன்சுதா கிராமத்தில் காஸ் டேங்கர் லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு தவறான திசையில் சென்றுள்ளது. அப்போது எதிரில் வேகமாக வந்த கார் மற்றும் ஜீப் மீது மோதியது.

இந்த விபத்தில் 4 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் இறந்தனர்.

விபத்து குறித்து போலீஸார் கூறுகையில், “விபத்தில் சிக்கியவர்கள் ம.பி.யின் ரத்லம், மந்த்சார் மாவட்டங்கள் மற்றும் ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த விபத்தில் கார் பயணிகள் நால்வரும் ஜீப் பயணிகள் மூவரும் உயிரிழந்தனர். ரத்லம் மாவட்ட மருத்துவமனை ஒன்றில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்தை தொடர்ந்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகிறோம்" என்று தெரிவித்தனர்.

x