புல்வாமா தாக்குதல் 5-ம் ஆண்டு தினம்: 40 வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி


புதுடெல்லி: ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுங்சாலையில் உள்ள புல்வாமா என்ற இடத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி மிகப் பெரிய தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. தற்கொலைப்படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதன் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், ‘‘புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு நாடு புகழஞ்சலி செலுத்துகிறது. நாட்டுக்காக அவர்கள் செய்த உயிர் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் வருங்கால தலைமுறையினர் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்’’ என குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

x